/

இயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று

தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
சுந்தர்.சி
Updated On :27 ஜனவரி 2024, 7:59 pm

DIN

தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,  பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சுந்தர்.சி-யின் மனைவி நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை உறுதி செய்யுள்ளார். 

மேலும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுந்தர்.சி சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும், சுந்தர் சி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக போட்டியிட நடிகை குஷ்புக்கு ஆதரவாக சுந்தர்.சி, அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.