கர்ணன்: இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு நேரில் சென்று நடிகர் விக்ரம் பாராட்டு (படங்கள்)
இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டியுள்ளார்.


கர்ணன் படத்தைப் பார்த்த நடிகர் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு நேரில் சென்று அவரைப் பாராட்டியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது. கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.
சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் கர்ணன் படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் கர்ணன் படம் பார்த்த நடிகர் விக்ரம் அப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததால் இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...