ஷங்கர் - ரன்வீர் சிங் கூட்டணியில் உருவாகும் அந்நியன் ஹிந்தி ரீமேக்: அதிகாரபூர்வ அறிவிப்பு
அந்நியன் படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளார் ஷங்கர். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.


அந்நியன் படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளார் ஷங்கர். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
விக்ரம், சதா நடிப்பில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படம் 2005-ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் அந்நியன் படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளார் ஷங்கர். ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் இப்படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஜெயந்திலால் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து மூன்று பேர் உயிரிழந்தார்கள். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்துள்ளது. விபத்துக்குப் பிறகு படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதில் ஷங்கர் - லைகா இடையே கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை வந்துள்ளது.
தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்குகிறார் ஷங்கர். இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது.
ராம் சரண் படம், அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 எனத் தற்போது மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...