கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகனின் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன் - வாழ்த்தும் ரசிகர்கள் (புகைப்படம்)

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் பெயரை சுட்டுரைப் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 12:31 pm

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் பெயரை சுட்டுரைப் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக அறிவித்த நடிகர் சிவகார்த்திகேயன் பல வருடங்களுக்கு பிறகு தனது தந்தையின் கை பிடித்ததாக தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Story image

இந்த நிலையில் தனது மகனை முத்தமிடும் புகைப்படம் பகிர்ந்துள்ள அவர், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் அன்போடும் ஆசியோடும் குகன் தாஸ் என பெயர் சூட்டியிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆராதனா 'கனா' படத்தில் பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.