சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு இதோ!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் அனிருத் இணையும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (வியாழக்கிழமை) துவங்கியது. இந்தப் படத்தை யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்.
இதையும் படிக்க| ஓடிடியில் வெளியாகும் டிக்கிலோனா
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்க, பிரகாஷ் ராஜ், இயக்குநர் இமையம் பாரதி ராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...