முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நுழைவு வரி விலக்கு சர்ச்சைக்கு நடுவே, தனுஷ் ரசிகர்களை மகிழ்வித்த சன் பிக்சர்ஸ்

நுழைவு வரி விலக்கு வழக்கில் நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவரது புதிய படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 8:27 am

DIN

நுழைவு வரி விலக்கு வழக்கில் நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவரது புதிய படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் தனுஷ் தனது சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்குக் கோரிய வழக்கில், சாமானியர் கூட வரி செலுத்துவதாகக் கூறி நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இது நடிகர் தனுஷின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தனுஷ் ரசிகர்களின் வருத்தத்தைப் போக்கும் வகையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (வியாழக்கிழமை) துவங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பூஜையின் போது நடிகர் தனுஷூடன்  நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. 

இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் 44வது படமான இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.