தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது விஜய் டிவி தொடர் - வைரலாகும் இறுதிக்காட்சி விடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:52 am

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர், கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் மலராக நடித்த பவித்ராவும், வெற்றியாக திரவியமும் நடித்தனர். 

வெற்றி - மலர் ஜோடிக்காகவே இந்தத் தொடரை பார்ப்பவர்கள் ஏராளம். சமீபத்தில் இந்தத் தொடரில் வெற்றிக்கும், மலருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது தான் இந்த தொடர் அதிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருப்பதாக ரசிகர்கள் கருதிய நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. 

படக்குழுவினர் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியலின் இறுதிக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேப் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அன்புடன் குஷி தொடரும் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் தொடர்ச்சியாக மேற்கண்ட தொடர்களைப் பார்க்கும்  ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.