பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முதன் முறையாக இணையும் குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின் - ஷிவாங்கி : ரசிகர்கள் மகிழ்ச்சி

குக் வித் கோமோளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இணைந்து சித்து குமார் இசையமைக்கும் அடி பொலி என்ற பாடலில் பணியாற்றவுள்னளனர்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:35 am

DIN

குக் வித் கோமோளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இணைந்து சித்து குமார் இசையில் அடி பொலி என்ற பாடலில் பணியாற்றவுள்னளனர். 

கரோனா பரவல் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த மக்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மட்டும் அல்ல பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பங்கேற்பாளர்களைப் பாராட்டிச் சென்றனர். 

Story image

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட பாடகி ஷிவாங்கி, 'டான்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.

Story image

தர்ஷா குப்தா தற்போது 'ருத்ர தாண்டவம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் கவர்ந்த சின்னத்திரை நடிகர் அஸ்வின், 'என்ன சொல்லப் போகிறாய்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஸ்வினுடன் புகழும் இணைந்து நடிக்கிறார்.

Story image

இந்த நிகழ்ச்சியில் அஸ்வினை ஷிவாங்கி நேசிப்பதாகக் காட்டிக்கொண்டார். இருவரும் இணைந்து சமையல் செய்யும் காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அஸ்வின் நடித்த 'காதல் ஒன்று கண்டேன்' குறும்படத்தில் இருந்து 'கண்ண வீசி' என்ற பாடலை நிகழ்ச்சியில் ஷிவாங்கி பாடியது பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் அவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது.  

Story image

'சிவப்பு மஞ்சள் பச்சை' பட இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் ஷிவாங்கி 'அடி பொலி' என்ற பாடலைப் பாடியுள்ளார். கண்ண வீசி என்ற பாடலுக்கு சித்து குமார் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலில் நடிகர் அஸ்வின், மற்றும் குஷி ரவி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த செய்தி அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓனம் பண்டிகையை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.