திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஐக்கிய அரபு அமீரகத்தின் ’சிறப்புக் கடவுச்சீட்டு’ பெற்ற மம்மூட்டி, மோகன்லால்

பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

News image

ஐக்கிய அரபு அமீரகத்தின் ’சிறப்பு கடவுச்சீட்டு’ பெற்ற மம்மூட்டி, மோகன்லால்

Updated On :20 ஆகஸ்ட் 2021, 10:27 am

பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு கோல்டன் விசா என அழைக்கப்படும் சிறப்பு கடவுச்சீட்டை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது. 

இந்த கடவுச்சீட்டின் மூலம் எத்தகைய முன்நிபந்தனையுமின்றி 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கவும், தங்களது தொழிலை மேற்கொள்ளவும் முடியும். 

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு சிறப்புக் கடவுச்சீட்டு வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பு செய்துள்ளது. 

இதற்கு முன்னதாக நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருக்கு இந்த சிறப்புக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.