மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செப். 9இல் வெளியாகிறது இயக்குநர் ஜனநாதனின் ’லாபம்' திரைப்படம்

சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசிப்படமான 'லாபம்' செப்டம்பர் 9ஆம் தேத் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

செப். 9இல் வெளியாகும் இயக்குநர் ஜனநாதனின் ’லாபம்' திரைப்படம்

Updated On :25 ஆகஸ்ட் 2021, 12:22 pm

DIN

சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசிப்படமான 'லாபம்' செப்டம்பர் 9ஆம் தேத் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை, புறம்போக்கு எனும் பொதுவுடமை, ஈ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஜனநாதன். அதனைத் தொடர்ந்து நடிகர்  விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7C என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்நிலையில் லாபம் படத்தின் டிரெய்லர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் கடந்த மார்ச் மாதம் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து லாபம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.  எனினும் தயாரிப்பு நிறுவனம் எஞ்சிய அனைத்துப் பணிகளையும் முடித்து, ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் லாபம் திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.