/

'ஜி.வி.பிரகாஷுக்கு நடிப்பிற்காக விருது உண்டு' : முன்பே கணிக்கும் இயக்குநர்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷிற்கு இடி முழக்கம் படத்துக்காக விருதுகள் கிடைக்கும் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:01 am

DIN

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷிற்கு 'இடி முழக்கம்' படத்துக்காக விருதுகள் கிடைக்கும் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

'தென்மேற்கு பருவக்காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள' மாமனிதன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். 

தற்போது இயக்குநர் சீனு ராமசாமி தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'இடி முழக்கம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.

Story image

ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்க வைரமுத்து இந்தப் படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான வினித் ஸ்ரீநிவாசன் இந்தப் படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். 

Story image

இந்தப் படம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில், ''இடி முழக்கம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் படத்தொகுப்பின் போது பார்த்தேன். இந்தப் படத்துக்காக தம்பி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும், வாழ்த்துகளும் உண்டு'' என்று குறிப்பிட்டுள்ளார். 

#இடிமுழக்கம்
முதற்கட்ட படப்பிடிப்பு
முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு
தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.