நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சொடக்குப் போட்டுப் பதிலைச் சொன்ன பாரதி கண்ணம்மா!

 ஒரே ஒரு கேள்விக்கான பதிலுக்காகக் கடந்த வாரம் பார்வையாளர்கள் காத்துக் கிடந்தனர். இந்த வாரம் பதிலுடன்!

News image

சொடக்குப் போட்டுப் பதிலைச் சொன்ன பாரதி கண்ணம்மா!

Updated On :30 ஆகஸ்ட் 2021, 1:44 pm

DIN

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில்  ஒரே ஒரு கேள்விக்கான பதிலுக்காகக் கடந்த வாரம் பார்வையாளர்கள் காத்துக் கிடந்தனர். இந்த வாரம் பதிலுடன்!

மீண்டும்  வந்த தலைவலிக்காக டாக்டரைப் பார்க்க கண்ணம்மா செல்ல, 'சௌந்தர்யா உங்கள் மாமியார்தானே' என்று கேட்ட டாக்டர், 'உங்களுடைய இரு குழந்தைகளும் நன்றாக இருக்கிறார்களா?'  என்ற வெடிகுண்டை வீசுகிறார்.

'இரட்டைக் குழந்தைகளா?' தனக்குப் பிறந்தன என்று அதிர்ச்சியடைந்த கண்ணம்மா, அடுத்த காட்சியில் தொலைபேசியில் அத்தை சௌந்தர்யாவை   அழைத்துக் கேட்கிறார்: 'அத்தை, நான் கேட்கிற கேள்விக்கு உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும், எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததா?'

Story image

கண்ணம்மாவின் கேள்வியே சரியாகக் காதில் விழவில்லையே எனப்  பொய்யாகக் கூறி, நழுவிவிட்டார் சௌந்தர்யா. ஆனால், ஹேமாவையும்  அழைத்துக் கொண்டு வீடு தேடி வந்துவிடுகிறார் கண்ணம்மா.

புகைப்படங்களைப் பார்க்க: கருப்பழகி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் புகைப்படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

சௌந்தர்யா  என்ன சொல்லப் போகிறார் என்று ஒரு வாரம் காக்க (பார்க்க) வைத்துக்கொண்டிருந்த தொடரில், இந்த வாரம் ப்ரமோவில் அதிரடியாக சொடக்குப் போட்டு பாரதியைக் கூப்பிட்டு, ஒரு பதிலைச் சொல்கிறார் கண்ணம்மா, நான்தான் லட்சுமியோட அம்மா!

பாரதி மட்டுமல்ல, பார்வையாளர்களும்கூட தொடரில் இந்த பதில் கண்ணம்மாவிடமிருந்து இவ்வளவு விரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ப்ரோமோவில் அடித்து ஆடியிருக்கிறார் கண்ணம்மா.

இனி என்னைச் சமையல் அம்மா என்று அழைக்காதே, அம்மா என்றே கூப்பிடு, வா, வீட்டுக்குச் செல்லலாம் என்று லட்சுமியை அழைத்துக்கொண்டு செல்கிறார் கண்ணம்மா.

Story image

அதிர்ந்துபோய் நிற்கிறார்கள் மறைந்துநிற்கும் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும்.  பாரதி என்ன செய்யப் போகிறார்?  கண்ணம்மாவின் அடுத்த மூவ்? இந்த 35 நிமிஷ ப்ரமோ தாங்கிப் பிடிக்கிறது ஒரு வாரத் தொடரை! பார்க்கலாம் என்னென்ன நடக்கப் போகிறது என்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.