/

'ஆர்ஆர்ஆர்' படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்

ஆர்ஆர்ஆர் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:35 am

DIN

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' (ரத்தம்,ரணம்,ரௌத்திரம்) படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் இருந்து உயிரே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரேற்பைப் பெற்று வருகிறது. 

இந்தப் படத்தின் முன்னோட்டம் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''இந்தப் படத்தின் முன்னோட்டம் சில காரணங்களால் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகாது. வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

இந்தப் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். தமிழில் இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன் நிறுவனம் வெளியிடவுள்ளது. தமிழில் இந்தப் படத்துக்கு மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார். இந்தப் படம் 'பாகுபலி' போல பெரும் வெற்றிபெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.