
நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர். இவரது படங்கள் வெளியாகும் திரையரங்குகள் திருவிழாவாக கோலமாக இருக்கும். தனது படங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தவர். மேலும் தனது உதவும் குணத்தால் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
தற்போது உடல் நலக் குறைவால் சினிமா மற்றும் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து முன்பு போல் அரசியல் பணியில் ஈடுபடவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த்தை சிறப்பு வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம். விஜயகாந்த் தரப்பில் நடிக்க ஒப்புகொண்டால் விஜயகாந்த்தை ரசிகர்கள் மீண்டும் திரையில் பார்த்து ரசிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.