ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பா. ரஞ்சித்தின் அடுத்த பட டீசர் நாளை வெளியீடு

இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் டீசர் நாளை (திங்கள்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
இயக்குநர் பா. ரஞ்சித்
Updated On :5 டிசம்பர் 2021, 1:02 pm

DIN


இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் டீசர் நாளை (திங்கள்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த பிராங்க்ளின் ஜேக்கப், ரைட்டர் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரகனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித் படத்தைத் தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டீசர் நாளை (திங்கள்கிழமை) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதையின் தொடக்கப் புள்ளி, தலைப்பு, காவல் துறை பற்றிய பார்வை உள்ளிட்டவை குறித்து இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் கூறியிருப்பதை விரிவாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.