அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

விதிமுறையை மீறி பிக் பாஸில் பங்கேற்ற கமல்: விளக்கம் கேட்கும் அரசு

கரோனா விதிமுறையை மீறி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்துள்ள

News image

கமல்ஹாசன் (கோப்புப்படம்)

Updated On :6 டிசம்பர் 2021, 5:53 am

DIN

கரோனா விதிமுறையை மீறி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசனாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு நவ. 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், வீடு திரும்பி 7 நாள்கள் முடிவடைவதற்குள் கடந்த சனிக்கிழமை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப் பிடிப்பில் கலந்து கொண்டதாக கமல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை செயலாளரிடம் திங்கள்கிழமை கூறுகையில்,

கரோனா விதிமுறையை மீறியது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

கரோனா விதிமுறைகளின்படி, நோய்த் தொற்றிலிருந்து வீடு திரும்பிய பிறகு 7 நாள்கள் கட்டாய வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.