
1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. கபீா்கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங்கும் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளார்கள். 83-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்டது.
கடந்த வருடம் வெளியாவதாக இருந்த இப்படம் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெளியான இப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
பெரிய நகரங்களில் 83 படம் நல்ல வசூலைப் பெற்றாலும் சிறிய நகரங்களில் இதன் வசூல் குறைவாக உள்ளதாகத் தெரிகிறது. எனினும் கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 83 படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் ரூ. 12.64 கோடி (அனைத்து மொழிகளிலும்), வெளிநாட்டில் ரூ. 11.81 கோடி என ஹிந்தி திரைப்படப் பத்திரிகையாளர் தாரன் ஆதர்ஷ் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
14 மணி நேரத்தில் பீஸ்ட் பட டப்பிங் பணிகளை முடித்த விஜய் - காரணம் என்ன?
நடிகர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா? : பிரேமலதா விளக்கம்
தன்னை விட 15 வயது இளைய காதலரை பிரிவதாக அறிவித்த சுஷ்மிதா
'விக்ரமா இது?' 'கோப்ரா'வுக்காக மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் விக்ரம் (புகைப்படம்)
ரஜினிகாந்த் - இயக்குநர் நெல்சன் இணைவது உறுதி ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.