டான் படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் பிரியங்கா மோகன்
சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.


சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இரு படங்களின் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. மார்ச் 26-ல் டாக்டர் படம் வெளியாகிறது. இதன்பிறகு டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக புதிய இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் டான் என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்குகிறார். இசை - அனிருத்.
இந்நிலையில் டான் படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரியங்கா மோகன், கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். டாக்டர் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி போன்றோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...