புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

என்னைப் போல் ஒரு நடிகை உண்டா?: கங்கனா ரணாவத் சவால்!

மெரில் ஸ்டிரீப், கால் கேடட் ஆகிய நடிகைகளுக்கு இணையாகத் தன்னிடம் திறமைகள் உள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.  

News image
Updated On :9 பிப்ரவரி 2021, 12:14 pm

DIN

மெரில் ஸ்டிரீப், கால் கேடட் ஆகிய நடிகைகளுக்கு இணையாகத் தன்னிடம் திறமைகள் உள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.  

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய நடிப்புத் திறமை பற்றி ட்விட்டரில் கங்கனா கூறியுள்ளதாவது:

ஒரு நடிகையாக நான் வெளிப்படுத்தும் வித்தியாசமான திறமைகள் இந்த உலகில் வேறு யாரிடமும் தற்போது இல்லை. பல்வேறு விதமான நடிப்பில் மெரில் ஸ்டிரீப் போலவும் ஆக்‌ஷன் மற்றும் கவர்ச்சியில் கால் கேடட் போலவும் திறமையை வெளிப்படுத்துகிறேன்.    

இந்த உலகில் என்னை விடவும் திரைப்படக் கலையில் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் இன்னொரு நடிகை உண்டா? அப்படிக் காண்பித்தால் என்னுடைய ஆணவத்தை விட்டு விடுகிறேன். அதுவரை நான் பெருமிதத்துடன் இருப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.