கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: வலிமை அப்டேட் குறித்து அஜித் அறிக்கை

உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 10:56 am

DIN

வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார்.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா, வலிமை படத்தின் பாடல்கள் பற்றி சமீபத்தில் தகவல் தெரிவித்தார். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ட்விட்டரில் இன்று தெரிவித்ததாவது: வணக்கம். வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை முதல் பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடவுள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும் என்றார்.

இந்நிலையில் வலிமை அப்டேட் குறித்து நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

கடந்த சில நாள்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை  கூட்டும். 

இதை மனதில் கொண்டு, ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.