முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கும் செந்தில்

முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கும் செந்தில்

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்.
Published on

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக 80, 90களில் திகழ்ந்தவர் செந்தில். கவுண்டமணி - செந்தில் ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்து மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளை அளித்துள்ளார்கள். 

இந்நிலையில் இத்தனை வருடங்கள் கழித்து முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கவுள்ளார் செந்தில். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்து இயக்கவுள்ளார். 

ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை என்கிற படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இப்படத்தைத் தயாரித்த சமீர் பரத்ராம், செந்தில் நடிக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com