தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்கு: நடிகை கங்கனா ஆவேசம்!

தாண்டவ் இணையத் தொடர் தொடர்பான கருத்துக்காக நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு...
தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்கு: நடிகை கங்கனா ஆவேசம்!
Published on
Updated on
1 min read

தாண்டவ் இணையத் தொடர் தொடர்பான கருத்துக்காக நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் குரோவர் உள்ளிட்டோர் நடித்துள்ள, அரசியல் கதைக்களம் கொண்ட தாண்டவ் என்கிற இணையத் தொடர் கடந்த 15-ஆம் தேதி அமேஸான் பிரைம் விடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் ஹிந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தத் தொடரை ஒளிபரப்பத் தடை விதிக்கக் கோரி மும்பை வடகிழக்குத் தொகுதியின் பாஜக எம்.பி. மனோஜ் கோடக், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அமேஸான் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. 

இது தொடர்பாக லக்னௌ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேஸான் உள்ளடக்கப் பிரிவின் தலைவர் அபர்ணா புரோஹித், வெப் தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ண மெஹ்ரா, கதாசிரியர் கெளரவ் சோலங்கி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். எந்தத் தனி நபரையும் சாதியையும் மதத்தையும் காயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்குக் கிடையாது. தற்போது இணையத் தொடரின் காட்சிகளில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளோம் என்று இயக்குநர் அறிவித்தார்.

தாண்டவ் இணையத் தொடரை நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். இந்த இணையத் தொடரின் பிரச்னை, இந்து வெறுப்பு கொண்ட கதை மட்டுமல்ல, இதில் ஒவ்வொரு பகுதியிலும் மோசமான, கண்டனத்துக்குரிய பல சர்ச்சையான காட்சிகள் வேண்டுமென்றே இடம்பெற்றுள்ளன. குற்ற நோக்கங்ளுக்காக மட்டுமல்லாமல் பார்வையாளர்களைத் துன்புறுத்தியதற்காக அவர்களைச் சிறையில் அடையுங்கள் என்றார். 

இதையடுத்து மற்றொரு ட்வீட்டை கங்கனா வெளியிட்டுள்ளார். அதில் கங்கனா கூறியதாவது:

ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜேக்கிடம் புகார் அளித்துள்ளார்கள். இதனால் என்னுடைய ட்விட்டர் கணக்கு தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்க தேசத்துரோகிகள் முயற்சி செய்கிறார்கள். என்னை இணைய உலகில் இருந்து அப்புறப்படுத்தினால் நிஜ உலகம் நிஜ கங்கனாவை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com