சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் புகார்

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை நான் ஆதரிப்பதாக பரவும் தகவலில் உண்மையில்லை என இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். 
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் புகார்
Published on
Updated on
1 min read

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை நான் ஆதரிப்பதாக பரவும் தகவலில் உண்மையில்லை என இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். 

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019, பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னா் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மாா்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும், திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. 

இந்த மசோதாவுக்குத் திரைப்படத் துறையினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்தச் சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என்று அவா்கள் கூறுகின்றனா். இதற்கு எதிராகப் பிரதான திரைப்பட தயாரிப்பாளா் சங்கங்கள் கூட்டாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளன.

ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும்; அது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. ஒளிப்பதிவு வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில் ஒளிப்பதிவு திருத்த மசோதாவை நான் ஆதரிப்பதாக பரவும் தகவலில் உண்மையில்லை என இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். சமூகவலைத்தளங்களில் என் பெயரில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்கர் பச்சான் புகார் மனு அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com