நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்யும்போது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நவசர நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரஷாந்துடன் இணைந்து ,அந்தகண், என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
இந்த நிலையில் நடிகர் கார்த்திக் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்ததில் அவருக்கு காலில் அடிபட்டு, நன்றாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க| கோமா நிலைக்கு சென்ற சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்
தற்போது அடிபட்ட காலில் சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தற்போது அதே காலில் மீண்டும் அடிபட்டுள்ளதால் எலும்பில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளதாம். அதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். நடிகர் கார்த்திக் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.