சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சமீபத்தில் தாயான ஷ்ரேயா கோஷல்: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் (விடியோ)

கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார் ஷ்ரேயா கோஷல்...

News image
Updated On :14 ஜூன் 2021, 11:23 am

DIN

பாடகி ஷ்ரேயா கோஷல், கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார்.

2002-ல் முதல் படத்திலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர் ஷ்ரேயா கோஷல். இதுவரை நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். பிப்ரவரி 5, 2015-ல் தொழிலதிபர் ஷிலாதித்யாவைக் காதல் திருமணம் செய்தார் ஷ்ரேயா கோஷல். இருவரும் 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்தார்கள். கடந்த மே 22 அன்று ஷ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேவ்யான் எனக் குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார்கள். 

இந்நிலையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார் ஷ்ரேயா கோஷல். இதுதொடர்பாக விடியோ வெளியிட்டு, இன்ஸ்டகிராமில் எழுதியதாவது:

வீட்டில் தேவ்யான் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது உடனடியாக வெளியே வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். மருத்துவர்களின் பரிந்துரைப்படி புதிய தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.