பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருமண விடியோ சர்ச்சை: சிவாங்கி, அஸ்வின் மறுப்பு

திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திகளை தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அஸ்வின், சிவாங்கி ஆகிய இருவரும் மறுத்துள்ளார்கள். 

News image
Updated On :23 ஜூன் 2021, 11:13 am

DIN


திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திகளை தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அஸ்வின், சிவாங்கி ஆகிய இருவரும் மறுத்துள்ளார்கள். 

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சிவாங்கி. சந்திரமுகி படத்தில் ரா ரா பாடலைப் பாடிய பின்னி கிருஷ்ணகுமாரின் மகள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவாங்கி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி மூலமாக அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். டான், ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின், தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் சிவாங்கி, அஸ்வின் ஆகிய இருவருக்கும் ஏராளமான பக்கங்கள் உண்டு. 

இந்நிலையில் அஸ்வினும் சிவாங்கியும் திருமணம் செய்துகொண்டதாக யூடியூப் சேனலில் செய்தி ஒன்று வெளியானது. இதையடுத்து இத்தகவலை இருவரும் மறுத்துள்ளார்கள். 

மார்பிங் செய்யப்பட்ட விடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன. நான் எந்தவொரு சக நடிகையையும் காதலிக்கவில்லை. நான் சிங்கிளாகவே உள்ளேன். படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

என்னையும் சக நடிகரையும் இணைத்து மார்ப் செய்யப்பட்ட படங்கள் உண்மைக்குப் புறம்பானவை. அதுபோன்ற தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று சிவாங்கி கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.