கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித் அணி! (படங்கள் & விடியோ)

சென்னையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி 6 பதக்கங்களை வென்றுள்ளது.

News image
படங்கள் - twitter.com/DoneChannel1
Updated On :8 மார்ச் 2021, 8:52 am

DIN

சென்னையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி 6 பதக்கங்களை வென்றுள்ளது.

பைக் ரேஸ், கார் ரேஸில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் அதிக விருப்பம் கொண்டவா் அஜித். எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளாா். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் ரைபிள் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபடுவார்.

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2 முதல் 7 வரை நடைபெற்றது. ரைபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இப்போட்டிகளை நடத்தினார். 

சென்னை ரைபிள் கிளப்பில் உறுப்பினரான அஜித், தனது அணியினருடன் இணைந்து 4 தங்கம் உள்பட 6 பதக்கங்களை வென்றுள்ளார். ஏர் பிஸ்டல் 10 மீ., சென்டர் ஃபயர் பிஸ்டல் (என்.ஆர்.) 25 மீ., ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 25 மீ., ஃப்ரீ பிஸ்டல் 50 மீ. ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களும் சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 25 மீ., ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (என்.ஆர்) 25 மீ. ஆகிய பிரிவுகளில் வெள்ளிப் பதக்கத்தையும் அஜித் அணி வென்றுள்ளது. சென்னை ரைபிள் கிளப் சார்பாகப் பங்கேற்ற அஜித் அணியில் சித்தார்த் சிவகுமார், ஜெகன்நாதன், சுமீத் ஹர்கிசண்டாஸ் சங்கவி, விஜய் குமார், வருண் மது, எஸ். சுதாகர் போன்றோர் இருந்தார்கள். இப்போட்டியில் 900 பேர் கலந்துகொண்டார்கள்.  

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.