/

சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

சுந்தர்.சி கதாநாயகனான நடிக்கும் படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm

DIN

ஆர்யா, சுந்தர்.சி, யோகி பாபு, ஆண்ட்ரியா ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் அரண்மனை 3 படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுந்தர்.சி கதாநாயகனான நடிக்கும் படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கட்டப்பாவ காணோம் படத்தை இயக்கிய மணி செயோனின் அடுத்த படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாச்சலம் போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - மணி பெருமாள், இசை - சந்தோஷ் தயாநிதி. 

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.