கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இமானுக்குத் தேசிய விருது: தொலைபேசியில் வாழ்த்திய ரஜினி!

விஜய் அண்ணன் மற்றும் அஜித் சாரும் தனிப்பட்ட முறையில் வாழ்த்தியுள்ளார்கள்.

News image
Updated On :24 மார்ச் 2021, 6:01 am

DIN

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றதற்காக தொலைபேசியில் ரஜினி வாழ்த்து கூறினார் என இமான் ட்வீட் வெளியிட்டுள்ளார். 

2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றுள்ளாா். 

சிறந்த குணச்சித்திர நடிகா் (துணை நடிகா்) - விஜய் சேதுபதி (படம்: சூப்பா் டீலக்ஸ்); சிறந்த இசையமைப்பாளர் - டி. இமான் (விஸ்வாசம்), சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கேடி (எ) கருப்பு துரை), சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறப்பு ஜூரி விருது என இரண்டு விருதுகள் - ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்ப் படமாக வெற்றி மாறன் இயக்கிய அசுரன் தேர்வாகியுள்ளது. பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் (போஸ்லே) சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இமான், ட்விட்டரில் கூறியதாவது:

தேசிய விருதை வென்றதற்காகத் தொலைபேசியில் அழைத்து ரஜினி வாழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் அண்ணன் மற்றும் அஜித் சாரும் தனிப்பட்ட முறையில் வாழ்த்தியுள்ளார்கள். விஜய் அண்ணனின் படமான தமிழனில் என்னுடைய திரைவாழ்க்கை தொடங்கியது. விஸ்வாசம் படத்துக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்காக அவர் வாழ்த்தியது இன்னும் சிறப்பு பெறுகிறது என்றார்.

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.