அஜித்தின் வலிமை பட அப்டேட்: போனி கபூர் அறிவிப்பு
அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் திரையரங்கு உரிமை குறித்த விவரங்களைத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.


அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் திரையரங்கு உரிமை குறித்த விவரங்களைத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.
வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் விளம்பரப் பணிகள் அஜித்தின் 50-வது பிறந்த நாளையொட்டி மே 1 முதல் தொடங்கும் என்றும் போனி கபூர் அறிவித்தார்.
இந்நிலையில் வலிமை படத்தின் தமிழகத் திரையரங்கு உரிமை இரு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போனி கபூர் ட்விட்டரில் கூறியதாவது:
வலிமை படத்தின் தமிழகத் திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸின் ராகுலுக்கும் கோபுரம் சினிமாஸூக்கும் அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...