எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

போனில் அழைத்த ரஜினி: பரவசமான நகைச்சுவை நடிகர் கிங் காங்

கிங் காங்கை எனக்கு மிகவும் பிடிக்கும். கரோனா எல்லாம் குறைந்த பிறகு அவரை நான் பார்க்கிறேன்...

News image
Updated On :11 மே 2021, 6:52 am

DIN

நகைச்சுவை நடிகர் கிங் காங்குடனான ரஜினியின் தொலைபேசி உரையாடல் சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ரஜினியுடன் இணைந்து அதிசய பிறவி படத்தில் நடித்துள்ளார் கிங் காங். தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள கிங் காங் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் 10 வருடங்களுக்கு முன்பு தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை ரஜினியின் கையால் வாங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து கிங் காங்கை போனில் அழைத்துப் பேசியுள்ளார் ரஜினி. இதன் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி பேசியதாவது:

10 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விருதை என் கையால் கொடுக்க வேண்டும் என நீங்கள் சொன்னதைக் கேட்கும்போது கஷ்டமாக இருந்தது. நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்த தகவல் எனக்கு வரவில்லை. தனிமைப்படுத்துதல் எல்லாம் முடியட்டும். நானும் ஊரில் இருக்கேன். அடுத்த மாதம் ஏதாவது ஒரு நேரத்தில் நாம் சந்திக்கலாம். (பிறகு கிங் காங்கின் தாயிடம் பேசிய ரஜினி, கிங் காங்கை எனக்கு மிகவும் பிடிக்கும். கரோனா எல்லாம் குறைந்த பிறகு அவரை நான் பார்க்கிறேன் என்றார்) படத்தில் ஏதாவது நடிக்க வேண்டுமென்றால் வெட்கப்படாமல் கேளுங்கள் கிங் காங். நீங்கள் குடும்பத்துடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள். அதற்கு நிச்சயம் நான் சொல்கிறேன் என்றார். 

கிங் காங் மீது ரஜினி வெளிப்படுத்திய அன்பும் அதற்கான கிங் காங்கின் பரவசமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.