நடிகையானார் பாடகி ஸ்வாகதா
பல கதைகள் கேட்டதில் இந்தப் படத்தின் கதை என்னை ஈர்த்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது...


பாடகி ஸ்வாகதா, காயல் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
நடிகை மாயாவின் சகோதரி, ஸ்வாகதா. இவர் பல தமிழ்ப் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில் காயல் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் ஸ்வாகதா. பாடலாசிரியர் தமயந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் போன்றோர் நடித்துள்ளார்கள்.
காயல் படத்தில் நடிகையாக அறிமுகமானது பற்றி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் ஸ்வாகதா. பல கதைகள் கேட்டதில் இந்தப் படத்தின் கதை என்னை ஈர்த்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...