விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனாவிலிருந்து மீண்டார் நடிகை கங்கனா ரணாவத்

கரோனாவை எப்படி வீழ்த்தினேன் என்பது பற்றி சொல்ல நிறைய உள்ளது. ஆனால்...

News image
Updated On :18 மே 2021, 10:46 am

DIN

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.

67-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கங்கனா ரணாவத், சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வானார். பிரபல நடிகையாக உள்ள கங்கனா பெறவுள்ள 4-வது தேசிய விருது இது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  கங்கனா ரணாவத் நடித்துள்ளார். 

கங்கனாவுக்கு கரோனா வைரஸ் தொற்று சமீபத்தில் உறுதியானது. இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவிட்டார். இதுபற்றி இன்ஸ்டகிராமில் கங்கனா கூறியதாவது:

கரோனா பாதிப்பு தற்போது இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. கரோனாவை எப்படி வீழ்த்தினேன் என்பது பற்றி சொல்ல நிறைய உள்ளது. ஆனால் கரோனா ரசிகர் மன்றங்களை புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். வைரஸை மரியாதை குறைவாகப் பேசினால் சிலர் புண்படுகிறார்கள். அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.