புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஐஎம்டிபி தரவரிசையில் உலகளவில் 3-ம் இடம்: சூரரைப் போற்று சாதனை!

படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரைப் போற்று படம் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.

News image
Updated On :18 மே 2021, 5:09 am

DIN

சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐஎம்டிபி தரவரிசையில் உலகளவில் 3-ம் இடம் கிடைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் கடந்த வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி. படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

சினிமா தகவல்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற இணையத்தளம் ஐஎம்டிபி. இதில் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரைப் போற்று படம் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளது. 9.1 புள்ளிகளுடன் ஷஷாங்க் ரிடம்ப்ஷன் (9.3), காட்ஃபாதர் (.2) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 

உலகளவிலான 1000 படங்களின் தரவரிசையில் முதல் 60 இடங்களில் நான்கு இந்தியப் படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த நான்கில் முதல் மூன்று இடங்களைத் தமிழ்ப் படங்கள் பிடித்துள்ளன. 

34-வது இடத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசனும் (8.5) 58-வது இடத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதாவும் (8.4) 60-வது இடத்தில் ஆமிர் கான் நடித்த டங்கலும் (8.4) இடம்பெற்றுள்ளன.

ஐஎம்டிபி தரவரிசை: முதல் 60 இடங்களில் இந்தியப் படங்கள்

3. சூரரைப் போற்று
34. ராட்சசன்
58. விக்ரம் வேதா
60. டங்கல்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.