நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் சர்ச்சை: புதிய புகைப்படம் வெளியானது!
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் சர்ச்சை எழுந்ததையடுத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது...


கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் சர்ச்சை எழுந்ததையடுத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது நடிகை நயன்தாரா தரப்பு.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள். இதன் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தில் ஊசி தென்படாததால் அதுகுறித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார்கள். ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டது எப்படி என்கிற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு, நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...