ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் இயக்குநர் பாரதிராஜா (படங்கள்)

தேனியில் உள்ள தனது இல்லத்தில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்...

News image
Updated On :26 மே 2021, 12:31 pm

இயக்குநர் பாரதிராஜா, கரோனா தடுப்பூசியை தேனியில் செலுத்திக்கொண்டுள்ளார். 

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் நேற்று 1 லட்சத்து 96 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரை இந்தியாவில் 19 கோடியே 85 லட்சத்துத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, தேனியில் உள்ள தனது இல்லத்தில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். இதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.