2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

''படம் பார்த்ததற்கு நன்றி'' - சீமானுக்கு நடிகர் சூர்யா பதில்

ஜெய் பீம் படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்துக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :17 நவம்பர் 2021, 12:52 pm

DIN

ஜெய் பீம் படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பேசாப் பொருளை பேசத் துணிந்து, ஆதிக்குடியான இருளர்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளை உண்மையாகப் பதிவுசெய்து உலமறிய வழங்கி இருக்கிற என் உயிர்த்தம்பி சூர்யாவையும், அவரது இணையர் ஜோதிகாவையும் மீண்டும் மனதாரப் பாராட்டுகிறேன் ! வாழ்த்துகிறேன் ! 

ஜெய் பீம் ஒவ்வொரு மனிதரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல. அதிகாரத்திற்கெதிராகவும், ஆதிக்கங்களுக்கெதிராகவும் உயர்ந்திருக்கிற போர் கருவி என்று குறிப்பிட்டுள்ளார். 

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, தங்களது நேரத்தை ஒதுக்கி எங்கள் திரைப்படத்தை பார்த்ததற்கு நன்றி. சட்டமும், நீதியும் ஒப்பற்ற ஆயுதங்கள் என்பதை உரக்க கூறவே ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டது. தங்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்று நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.