லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்த முறை பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? வெளியான புதிய ப்ரமோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் வீட்டின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 11:58 am

DIN


கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் வீட்டின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளை முதல் (அக்டோபர் 3) ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் கமல்ஹாசன் புதிய பிக்பாஸ் வீட்டில் இருந்தபடி ஆரம்பிக்கலாங்களா என்று கேட்கிறார். 

Story image

கடந்த முறையை விட இந்த முறை பிக்பாஸ் வீடு மிகவும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் முன் பக்கம் பிக்பாஸ் 5 என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. வீட்டின் மேல் தளத்தில் இருந்து கமல்ஹாசன் பேசுகிறார். ஒருவேளை இந்த முறை வீட்டிற்கு மேல் தளத்திலும் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Story image

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த கனி, சுனிதா, ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் வருண், செய்தி வாசிப்பாளர் கண்மணி, விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா, பாய்ஸ் பட நடிகர் மணிகண்டன், துள்ளுவதோ இளமை நடிகர் அபினய், கழுகு பட கதாநாயகன் கிருஷ்ணா, பிரியா ராமன், சூசன், மாடல் கோபிநாத் ரவி, ராம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்துள்ள ராஜூ ஜெயமோகன், நடிகை வடிவுக்கரசி, யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.