லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிக்பாஸ் முதல் நாள் : நடிகர் ராஜு ஜெயமோகனுக்கு தொகுப்பாளர் பிரியங்கா கொடுத்த பதிலடி : வெளியான ப்ரமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. 

News image
Updated On :4 அக்டோபர் 2021, 5:54 am

DIN

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 3) கோலகலமாக துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி அசத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். அதன் படி இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழச்சியில் ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, பாடகி இசைவாணி, யூடியூப் விமரிசகர்  அபிஷேக் ராஜா, சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் அபிநய், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மாடல் அழகி நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், நமிதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, ஸ்ருதி ஜெயதேவன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துதகொண்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் வீட்டின் தலைவர்களுக்கான போட்டி நடைபெறுகிறது. தலைவராக விரும்புவர்கள் தாமாக முன் வரலாம் என பிக்பாஸ் சொல்ல அவர்களின் ராஜூ ஜெயமோகன், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு ஆகியோர் களமிறங்குகிறார்கள். அப்போது நான் கழிவறை சுத்தம் செய்கிறேன் என ராஜூ சொல்ல, உடனே பிரியங்கா, அது தான் ஈஸி என கமெண்ட் கொடுக்கிறார். இதனால் அந்த இடமே கலகலப்பாகிறது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.