'கனா' பட இயக்குநருடன் இணையும் உதயநிதி ஸ்டாலின் : முக்கியத் தகவலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
கனா பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து அறிவிப்பு வெளியானது.


கனா பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து அறிவிப்பு வெளியானது.
பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கனா படத்தின் மூலம் இக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தை அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.
பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு கடினமானது என்பதை மிக உணர்வுப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்தப் படம் விமரிசன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அருண்ராஜா இயக்கும் படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் ஹிந்தியில் வெற்றிபெற்ற ஆர்டிகில் 15 படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மறு உருவாக்கம் செய்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தை போனி கபூரின் புராஜெக்ட் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...