மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெய் பீம் திரைப்படத்தின் ‘பவர்’ பாடல் வெளியீடு

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் ‘பவர்’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

News image

ஜெய் பீம் திரைப்படத்தின் ‘பவர்’ பாடல் வெளியீடு

Updated On :18 அக்டோபர் 2021, 11:45 am

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தின் ‘பவர்’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நான்கு படங்களைத் தயாரித்து அனைத்தையும் அமேசான் வெளியீடாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். அதில் ’இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாளும்’ ‘உடன் பிறப்பே’ ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து ’ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ‘பவர்’ எனத் தொடங்கும் பாடலைப் படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள்.

’ஜெய் பீம்’ படத்தை ஞானவேல் இயக்க, நடிகர் சூர்யா  வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.