''தமிழ்நாட்டில் இளையராஜாவும் இருக்கிறார் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்கு காட்டுவோம்'' - வைரமுத்து அதிரடி

பாரதிராஜா, கமல்ஹாசன், இளையராஜா போன்றோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க பாடலாசிரியர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். 
''தமிழ்நாட்டில் இளையராஜாவும் இருக்கிறார் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்கு காட்டுவோம்'' - வைரமுத்து அதிரடி

67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். 

அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள வாழ்த்துப் பதிவில், ''பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். 

கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையாராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும் நீண்ட வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. அதன் காரணமாக இருவரும் இணைந்து பணியாற்றுவதில்லை. இருந்தபோதிலும் இளையராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வைரமுத்து கோரிக்கைவிடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com