ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நேரடியாக திரையரங்கில் வெளியாகும் விஜய் ஆண்டனி படம்: எப்பொழுது தெரியுமா ?

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கோடியில் ஒருவன்' திரைப்படம் இந்த மாதம் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 8:59 am

DIN

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கோடியில் ஒருவன்' திரைப்படம் இந்த மாதம் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் ஆண்டனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இந்தப் படத்தை ஆனந்த கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

Story image

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, ஆத்மிகா நடித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக திரையரங்குகளில் இந்த மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இந்தப் படத்தின் கதாநாயகி ஆத்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Story image

இந்தப் படத்துக்கு ஹரிஷ் அர்ஜூன் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். இந்தப் படத்தை செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று, மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.