காதலருடன் இருக்கும் புகைப்படம் : முதன்முறையாக பகிர்ந்த 'செம்பருத்தி' கதாநாயகி
காதலர் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை ஷபானா முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் தொடரில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானாவுக்காகவே அந்தத் தொடரைப் பார்ப்பவர்கள் உண்டு.
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனை, ஷபானா காதலிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. ஆனால் இருவரும் இதுகுறித்து அமைதி காத்தனர்.
இந்த நிலையில் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முதலாக பகிர்ந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரபலங்கள் உட்பட பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.