மீண்டும் பிரபல இயக்குநருடன் இணையும் ஜெயம் ரவி - கதாநாயகி யார் தெரியுமா?
பூலோகம் படத்துக்குப் பிறகு மீண்டும் கல்யாண் இயக்கும் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார்.


பூலோகம் படத்துக்குப் பிறகு மீண்டும் கல்யாண் இயக்கும் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார்.
இயக்குநர் மணிர்தனம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் வேடத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டதை நடிகர் ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பூலோகம் பட இயக்குநர் கல்யாண் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். ஜெயம் ரவியின் 28வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்கீரன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை, ஜெயம் ரவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்றது. பூஜையின் போது ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, அவருக்கு நடிகை பிரியா பவானி ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...