புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இயக்குநராக அறிமுகமாகும் பிரபு தேவாவின் தம்பி: யார் கதாநாயகன் தெரியுமா ?: பிரபு தேவா சிறப்பு நடனம்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிக்கும் படத்தை பிரபு தேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் இயக்கவுள்ளார். 

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:57 am

DIN


கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இயக்கும் படத்தை பிரபு தேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் இயக்கவுள்ளார். 

தமிழ் சினிமாவின் பிரபலமான நடன இயக்குநர் சுந்தரம். இவருக்கு ராஜூ சுந்தரம், பிரபு தேவா, நாகேந்திர பிரசாத் ஆகிய மூன்று மகன்கள். இதில் பிரபு தேவாவும், ராஜூ சுந்தரமும் நடிகர்கள், நடன இயக்குநர்கள் என்பதைத் தாண்டி திரைப்படங்களையும் இயக்கியுள்ளனர். 

அந்த வரிசையில் நாகேந்திர பிரசாத்தும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழாவில் நடன இயக்குநர் சுந்தரம், பிரபு தேவா, நாகேந்திர பிரசாத், புனித் ராஜ்குமார், நடன இயக்குநர் ஜானி ஆகியோர் கலந்துகொண்டனர். 

அப்போது எடுத்துக்கொண்டப் புகைப்படங்களை ஜானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரே பாடலுக்கு நடன இயக்குநர் பிரபு தேவா மற்றும் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் நடனமாடவுள்ளனர். இந்தப் பாடலுக்கு நடன வடிவமைப்பதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் நடன இயக்குநர் சுந்தரத்தின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.