2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

யோகி பாபுவுடன் இணையும் பிரபல பிக்பாஸ் நடிகை

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ஓவியா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 

News image
Updated On :22 செப்டம்பர் 2021, 11:22 am

DIN

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ஓவியா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 

தமிழ் சினிமாவில் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு. ஒரு பக்கம் அஜித்துடன் இணைந்து வலிமை, மற்றொரு பக்கம் நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் என தமிழில் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோர் படங்களில் யோகி பாபு நடித்துக்கொண்டிருக்கிறார். 

Story image

இந்த நிலையில் அவர் நடிகை ஓவியாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதனை நடிகை ஓவியா தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறாரா என்ற தகவலும் விரைவில் தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.