கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிக்பாஸ் காரணமாக பிரபல விஜய் டிவி தொடர் தற்காலிக நிறுத்தம் ?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செந்தூரப்பூவே தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 10:16 am

DIN

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செந்தூரப்பூவே தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. துவக்க தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, மற்ற தினங்களில் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ரஞ்சித் கதாநாயகனாக நடித்துவரும் செந்தூரப்பூவே தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, ஷகிலாவின் மகள் மிலா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.