
செப்.10-இல் வெளியாகிறது சந்தானம் நடிக்கும் ’டிக்கிலோனா’
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படம் கரோனா தொற்று காரணமாக வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இதையும் படிக்க | அட்லி - ஷாருக்கான் படம்: நயன்தாராவுடன் இணைந்த மற்றொரு கதாநாயகி
இயக்குநர் கார்த்திக் யோகி இயக்க்கியுள்ள இந்தத் திரைப்படத்தை பலூன் பட இயக்குநர் சினிஷ் தயாரித்திருக்கிறார். நடிகர்கள் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.