போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிற படம் 'வலிமை'. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சுமித்ரா, ஹுமா குரேஷி, புகழ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க | ''தலனு சொல்லாதிங்க'' : ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள்
இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டாம் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தற்போது அம்மாவுடனான நேசத்தை பிரதிபலிக்கும் பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். முழு பாடல் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 6.30க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


